செய்தி

திருகோணமலையில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

திருகோணமலை – மட்கோ பகுதியில் மன உளைச்சல் காரணமாக ரயிலுடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பாலையூற்று பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இளைஞரொருவர் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் ரயிலுடன் மோதியதாகவும் தெரியவருகிறது.

இச் சம்பவத்தில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த அபயரத்னகே தரிந்து அசங்க (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது .

போதைப்பொருள் பாவனையின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாவும் தெரிய வருகின்றது

மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!