ஐரோப்பா

பிரித்தானியாவில் இயங்கி வந்த தமிழ் உணவகம் ஒன்றின் மோசமான செயற்பாடு – 10,000 பவுண்ட்ஸ் அபராதம் விதிப்பு!

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றுக்கு 10,000 பவுண்ட்ஸுக்கும் அதிகமான அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுத்தாலை (Southall) தளமாகக் கொண்ட உணவகம் ஒன்றில் ஈலிங் கவுன்சில் ஆய்வாளர்கள் சோதனை நடத்தியுள்ளனர்.  இதன்போது சுகாதாரம், பாதுகாப்பு விதிமீறல்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அட்ரியன் பிசினஸ் சென்டரை தளமாகக் கொண்ட பாலாஜி ஃபுட்ஸ் லிமிடெட்டின்  (Balaji Foods Ltd)  இயக்குனர்   திலோகரம் கச்சாவா (Tilokaram Kachhawa)  மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர்  மீது சரியான ஒப்புதல் இல்லாமல் செயல்படுதல், உணவை மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கத் தவறியது, பாதுகாப்பற்ற உணவை சந்தையில் வைப்பது, ஒவ்வாமைகளைத் தவறாக லேபிளிடுதல் மற்றும் மோசமான சுகாதார நடைமுறைகள் உள்ளிட்ட 06 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில், அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த உணவகம் தொடர்ச்சியாக இயங்குவதற்கும் கவுன்சில் தடை விதித்துள்ளது. இருப்பினும் முகாமையாளர் அதனை சுத்தப்படுத்தி அபராதத்தை செலுத்தியதை தொடர்ந்து தடை நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!