ஐரோப்பா

இத்தாலியில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி – மாயமான ரயில்

இத்தாலியில் சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என்பதால் அதிவேக ரயில் ஒன்று சுமார் ஒரு மணி நேரம் முன்கூட்டியே புறப்பட்டுள்ளதால் பயணிகள் குழப்பமடைந்துள்ளனர்.

அதனால் ரோம் நகரின் டெர்மினி ரயில் நிலையத்தில் பயணிகள் பலரும் தவிக்கவிடப்பட்டனர்.

Trenitalia நிறுவனத்தின் Silver Arrow அதிவேக ரயில் ரோமிலிருந்து ஜெனோவா நகருக்கு மாலை 4.20 மணிக்குப் புறப்படவிருந்தது. ரயிலைத் தேடிய பயணிகளுக்கு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அது மதியம் 3.30 மணிக்கெல்லாம் புறப்பட்டுள்ளது. வழக்கமான ரயில் பாதையில் மேம்பாட்டுப் பணிகள் நடந்ததால் ரயில் வேறொரு மெதுவான பாதையில் செல்ல வேண்டியிருந்தது.

சரியான நேரத்தில் சென்றடைய ரயில் 50 நிமிடங்கள் முன்கூட்டியே புறப்பட்டதாக ரயில் நிர்வாகி கூறினார். நேர மாற்றம் குறித்து சில பயணிகள் மட்டும் தகவல் பெறவில்லை என்று Trenitalia ரயில் நிறுவனம் குறிப்பிட்டது.

ஆனால் ரயில் பாதி காலியாகச் சென்றதாக உள்ளூர் செய்தித்தாள் தெரிவித்தது. ரயிலைத் தவறவிட்ட பயணிகள் அடுத்த ரயிலில் சென்றனர் அல்லது பணத்தைத் திருப்பிப் பெற்றுக்கொண்டனர்.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்