பொழுதுபோக்கு

நீண்ட இடைவெளிக்குப்பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் பாவனா!! சூப்பர் ஜோடி செட்டாகியது

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஹ்மான் மற்றும் பாவனா முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் ரியாஸ் மாரத் இயக்கும் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் ரஹ்மான் நடிக்கிறார்.

நீண்ட இடை வெளிக்கு பிறகு நடிக்க வந்த பாவனா இதில் தடயவியல் மருத்துவ அதிகாரியாக நடிக்கிறார்.

ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை ஏ.பி.கே சினிமாஸ் சார்பாக ஆதித் பிரசன்ன குமார் தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ‘துருவங்கள் 16’ படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் தொடங்கியது.

இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சி, பாண்டிச்சேரி மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் ஜூன் மாதத்தில் நடைபெறுகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!