இலங்கை செய்தி

தாய் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் – பரிதாபமாக உயிரிழந்த மகள்

தலதாகம்மன கபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவியின் தாயும் படுகாயமடைந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்தபத்து முல்லை பிரதேசத்தை சேர்ந்த ஹிமாயா கருணாரத்ன என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த போது மோட்டார் சைக்கிள் வீதியின் நடுவில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியில் கவிழ்ந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்திசையில் வந்த பேருந்து மோதியதில் தாய் மற்றும் மகள் இருவரும் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content