ஜெர்மனியில் அகதி அந்தஸ்து தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
ஜெர்மனியில் அகதி அந்தஸ்து தொடர்பாக ஜெர்மனி நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜெர்மனி நாட்டுக்குள் அகதிகள் வருவதை தடுப்பதற்கு பல சட்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனி அரசாங்கத்தால் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளையில் ஜெர்மன் பாராளுமன்றமானது கடந்த வாரம் கிழக்கு ஐரோப்பிய நாடான மோல்டாவியா மற்றும் ஜோர்ஜியா போன்ற நாடுகளை பாதுகாப்பான நாடுகளாக பிரகடனப்படுத்தி இருந்தது.
அதாவது இந்த நாடுகளில் இருந்து ஜெர்மன் நாட்டுக்கு வரும் அகதிகளுக்கு அகதி அந்தஸ்த்தை வழங்க கூடாது என்று பாராளுமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது ஜெர்மனியின் மேல் சபையான முன்டஸ்றாட்டுக்கு விடப்படும் பொழுது சிறிஸ்கோஸ்லேன் மாநிலமானது இந்த புதிய சட்டத்துக்கு எதிராக தாங்கள் வாக்களிக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தது.
குறிப்பாக பசுமை கட்சியானது புதிய சட்டத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு இருந்தது. ஆனால் தற்பொழுது தனது ஆதரவை இந்த கட்சி தெரிவிக்கும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.