மக்களின் இதயங்களில் வாழும் தலைவர்!
“அமரர் ஜெயலலிதா மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.”
இவ்வாறு பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்றாகும்.
இதனை முன்னிட்டு இந்திய பிரதமர், அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் பிரமுகர்கள் பலரும், ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.
“ஜெயலலிதா பிறந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார்.
அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார்.
கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார்.
அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்” என்று எக்ஸ் வலைதள பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.




