இந்தியாவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் வேடமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை!
இந்தியாவின் மத்திய வங்கியின் அதிகாரிகள் போல வேடமிட்டு வந்த ஆயுதமேந்திய நபர்கள், 70 மில்லியன் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி கிளைகளுக்கு இடையே பணத்தை பரிமாற்றுவதற்கு முனைந்தபோது SUV ரக வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்கள் வேனில் இருந்தவர்களிடம், தாங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் என்றும், இவ்வளவு பெரிய தொகையை கொண்டு செல்வதற்கான சரியான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறி கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வாகனம், போலி இலக்கத்தகடு என்பன குறித்து விசாரணைகள் நடைபெற்று வரும் அதேவேளை இந்த சம்பவத்தில் வங்கியில் உள்ளவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




