ஐரோப்பா

வெர்சாய் அரண்மனையில் பிரமாண்ட விருந்திற்கு ஏற்பாடு – ட்ரம்பிற்கு அழைப்பு!

வெர்சாய் அரண்மனையில் இடம்பெறும் பிரமாண்டமான விருந்தில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ( Emmanuel Macron) இதற்கான அழைப்பை விடுத்துள்ளார்.  இருப்பினும், இந்த நிகழ்வில் ட்ரம்ப் கலந்துகொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த ஆண்டு ஜி7 மாநாட்டை பிரான்ஸ் நடத்துகிறது. பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் ( Evian-les-Bains) என்ற ஏரிக்கரை ஓய்வு விடுதியில் ஜூன் 15-17 ஆம் திகதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.

மேற்படி மாநாட்டிற்கு அடுத்த நாளே இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஈரானுடனான தனது போர் உள்ளிட்ட பிற பிரச்சினைகள் காரணமாக, பல ஜி7 உறுப்பு நாடுகளுடனான ட்ரம்பின் உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழ்நிலையில் ட்ரம்ப் இதில் கலந்துகொள்வரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!