85 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 24 வயதான இளம்பெண்
காதலிப்பவர்கள் தங்கள் துணையின் வயதைக் கண்டுகொள்வதில்லை. இதை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள், இப்போது அப்படிப்பட்ட ஒரு காதல் ஜோடியின் கதை ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் 24 வயதான யுவதி 85 வயதான முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 100 வயது ஆனாலும் பரவாயில்லை என்று முதியவரிடம் மனதை பறிகொடுத்த யுவதி திருமணத்திற்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
டெய்லி எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அமெரிக்காவின் மிசிசிப்பியில் வசிக்கும் 24 வயதான மிராக்கிள் போக், 2019 இல் 85 வயதான சார்லஸ் போக்கை முதல் முறையாக சந்தித்தார்.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நெருக்கமாக்கினர், சில நாட்களில் இருவரும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
இந்த நட்பு படிப்படியாக காதலாக மாறி இருவரும் தங்கள் மனதை ஒருவருக்கு ஒருவர் கொடுத்தனர். அதன் பிறகு இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்க திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தாக கூறியுள்ளனர்.