ஐரோப்பா

ஜெர்மனியில் குடியுரிமை பெற காத்திருப்போருக்கான செய்தி!

குடியுரிமை பெறுவதற்கான விதிகளை எளிதாக்கும் சட்டத்தை ஜெர்மன் சட்டமியற்றுபவர்கள் அங்கீகரித்துள்ளனர்.

இந்த விதிகளின்படி,புலம்பெயர்ந்தோரின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் திறமையான தொழிலாளர்களை ஈர்க்க உதவும் நோக்கத்துடன் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் சடத்தின் படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது “சிறப்பு ஒருங்கிணைப்பு சாதனைகள்” ஏற்பட்டால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குடியுறிமை பெற தகுதியுடைவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

பழைய விதிகளின்படி,  குடியுரிமைக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்ற ஒருவர் ஜேர்மனியில் 08 அல்லது 06 ஆண்டுகள் வசிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் ஜேர்மனில் பிறக்கும் குழந்தை ஒன்று பெற்றோர்கள் 05 வருடங்கள் அங்கு வசிக்கும் பட்சத்தில் தானாகவே குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பழைய விதிகளின்படி பெற்றோர்கள் நீண்டகாலம் அங்கு வசித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய யூனியன் உறுப்பினர்கள் மற்றும் சுவிட்சர்லாந்தைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் இப்போது ஜேர்மன் குடியுரிமையைப் பெறும்போது தங்கள் முந்தைய குடியுரிமையைக் கைவிட வேண்டியிருந்த நிலையில் தற்போது,  இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பதற்கான கட்டுப்பாடுகளும் கைவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!