இலங்கை

தாய் வெளிநாட்டில் – இலங்கையில் நடந்த அதிர்ச்சி

அம்பாறை – பன்னல்கம பிரதேசத்தில் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தந்தை ஒருவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார.

இறந்தவரின் மனைவி 6 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றுள்ளார்.

அக்காலப்பகுதியில் ​​தந்தை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளிநாட்டில் உள்ள தனது தாயிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.

அதன்படி, இது குறித்து விடயம் தொடர்பில் பெண் தனது கணவரிடம் வினவிய நிலையில், ​​சம்பவம் குறித்து பொலிசாருக்கு அறிவித்தால், குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கணவன் மிரட்டியதாக அப்பெண் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

அந்த அச்சுறுத்தலுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்க தாய் நடவடிக்கை எடுத்திருந்தார். தகவல் கிடைத்ததும் உடனடியாக செயற்பட்ட தமன பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று சம்பந்தப்பட்ட வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது திடீரென வீட்டுக்குள் ஓடிய அந்த நபர், அங்கிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!