புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு!
2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் 03 இலட்சத்து 37 ஆயிரத்து 591 மாணவர்கள்தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 15 times, 1 visits today)





