இலங்கை

பீடி உற்பத்தியாளரை தாக்கிய மதுவரி அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்

வலஸ்முல்ல பிரதேசத்தில் பீடி உற்பத்தியாளர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை மற்றும் இலஞ்சம் பெற முயற்சித்தமை தொடர்பில் கலால் திணைக்கள அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பணிப்புரைக்கு அமைய, சந்தேகத்திற்குரிய அதிகாரிகளை பணி இடைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை கலால் ஆணையாளர் நாயகம் மேற்கொண்டுள்ளார்.

இந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக அவர்களின் தரம் எதுவாக இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சியம்பலாபிட்டிய மேலதிக பணிப்புரைகளை வழங்கியுள்ளார்.

பீடி உற்பத்தியாளரின் உரிமம் ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்ததால், செப்டம்பர் 18ஆம் திகதி தங்காலை கலால் நிலையப் பொறுப்பாளர் உள்ளிட்ட கலால் அதிகாரிகள் குழு அவரது வீட்டுக்குச் சென்றுள்ள்ளனர் .

வலஸ்முல்லையில் உள்ளபீடி உற்பத்தியாளரின் உரிமம் கடந்த ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், இதன் காரணமாக கடந்த 18ஆம் திகதி தங்காலை மதுவரி பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று உற்பத்தியாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்வு காணும் வகையில் பீடி உற்பத்தியாளரிடம் 14 இலட்சம் ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த நபரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று தாக்கி 10 இலட்சம் ரூபா பணத்தினை பலவந்தமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வௌியாகியுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக பீடி உற்பத்தியாளர் வலஸ்முல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இதில் தொடர்புடைய 05 சந்தேக நபர்களை நேற்று (25) கைது செய்தனர்.

தங்காலை மதுவரி பிரிவின் பொறுப்பதிகாரி, இரண்டு மதுவரி கட்டுப்பாட்டாளர்கள், மதுவரி கட்டுப்பாட்டாளர் பிரிவின் சாரதி மற்றும் இராணுவ சார்ஜன்ட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்