தெற்கு ஸ்பெய்னில் ரயில் சேவைகள் பாதிப்பு!
தெற்கு ஸ்பெயினில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பெய்துவரும் கனமழை காரணமாக மாட்ரிட்டின் தென்மேற்கில் உள்ள அல்டியா டெல் ஃப்ரெஸ்னோவின் கிராமப்புறப் பகுதியில் இருவர் காணாமல்போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,
இரவு முழுவதும் அவசர சேவைகள் தயார் நிலையில் இருந்ததாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மாட்ரிட், காஸ்டில், கேடலோனியா மற்றும் வலென்சியா பகுதிகளில் திடீரென பெய்த மழையால் தெருக்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், ஆழங்கட்டி மழையும் பெய்துள்ளது.
இந்நிலையில் ஸ்பெய்னின் வானிலை ஆய்வு மையம் செம்மஞ்சள் எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
(Visited 5 times, 1 visits today)