ஆசிய தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற நாளை முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது.
நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகள் மோத உள்ளன.
இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டுக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இலங்கையின் சில முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. ஹசரங்கா, சமீரா, குசல் பெரேரா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறவில்லை.
ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி:-
- தசுன் ஷனகா, பதும் நிசானகா, திமுத் கருணாரத்ணே, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, சதீர சமரவிக்ரம, மகேஷ் தீக்சனா, துனித் வெல்லலகே, மதீஷா பத்திரனா, குசன் ரஜிதா, துஷான் ஹேமந்த, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷன்.
(Visited 12 times, 1 visits today)