ரஷ்யாவில் சூறாவளி – பரிதாபமாக உயிரிழந்த 3 சிறுவர்கள் உட்பட 8 பேர்

ரஷ்யாவில் வீசிய சூறாவளியில் 3 சிறுவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் Mari El பகுதியில் உள்ள தேசியப் பூங்காவில் Volga ஆற்றோரத்தில் அமைக்கப்பட்ட முகாம் மீது மரங்கள் விழுந்ததில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூறாவளி தாக்கியபோது முகாமில் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாகவும் அவர்களில் உயிரிழந்த 7 பேரின் உடல்கள் முகாமில் மீட்கப்பட்டன.
எஞ்சியவர் மருத்துவமனையில் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் 29 பேருக்குக் காயங்கள் ஏற்பட்டன.
16 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுற்றுப்பயணிகள் வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொள்ளவில்லை என்று அரசாங்கம் கூறியது.
முகாமில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
(Visited 17 times, 1 visits today)