இந்தியா

உத்திரபிரதேசத்தில் ஆற்றின் நடுவே பயணிகளுடன் சிக்கி கொண்ட பேரூந்து (வீடியோ)

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் ஆற்றில் சிக்கிய பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடமாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆற்றில் சிக்கியது. மண்டவாலி மாவட்டத்தின் கீழ் வரும் பிஜ்னோரின் கோட்டா வாலி ஆற்றில் 36 பயணிகளுடன் சென்ற சாலைப் பேருந்து ஆற்றில் சிக்கிக் கொண்டது.

பேருந்தில் சிக்கிய பயணிகள் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கதறினர். சில பயணிகள் அழத் தொடங்கினர். இன்னும் சில பயணிகள் ஜன்னல் வழியே தப்பிக்க முயன்றனர்.தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், பயணிகளை காப்பாற்றும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆற்றின் பலத்த நீரோட்டத்தில் பேருந்து அடித்துச் செல்லாமல் இருக்கவும், பேருந்து கவிழாமல் இருக்கவும் ஜேசிபி மூலம் தடுக்க முயற்சி செய்யப்பட்டது.இந்த முயற்சிக்கு பிறகு, பேருந்து அப்படியே நின்றதால் பயணிகளை வெளியேற்றும் பணி துவங்கியது.

துரித நடவடிக்கைக்கு பின்னர் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே