ஐரோப்பா

கிரிமியா பாலத்திற்கு அருகில் இருவர் உயிரிழப்பு!

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக  பாலம் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அவசரநிலை எற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

க்ராஸ்னோடர் பிரதேசத்தில் இருந்து 145 வது தூண் பகுதியில் அவசரநிலை ஏற்பட்டது எனவும் கிரிமியா பகுதியின் ஆளுநர் செர்ஜி அக்ஸியோனோவ் தெரிவித்துள்ளார்.

சட்ட அமலாக்க முகவர் மற்றும் அனைத்து தொடர்புடைய சேவைகளும் குறித்த பகுதியின் நிலைமையை கண்காணித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிரிமியன் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்துவது தொடர்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவையும் கிரிமியன் அதிகாரிகள் வழங்குவார்கள் என்று ரஷ்யாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்