குறைந்த எண்ணெய் அழுத்தம் காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!
கேம்பிரிட்ஜில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிரக்கப்பட்டது.
குறித்த விமானமானது மினியாபோலிஸ் புறநகர் சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்பட் சிறிது நேரத்திலேயே விமானிக்கு குறைந்த எண்ணெய் அழுத்த எச்சரிக்கை கிடைத்துள்ளது.
இதனையடுத்து அனோகா – பிளெய்ன் விமான நிலையத்திற்கு திருப்பிவிடுமாறு பரிந்துரைக்கப்பட்டது.
இருப்பினும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த விமானி சாமத்தியமாக செஸ்னா 172 ஐ மினியாபோலிஸ் புறநகர் சாலையில் தரையிறக்கினார்.
விமானியின் இந்த சாமர்த்திய முடிவால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)