இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவருக்கும் அமைச்சர் நஸீர் அஹமட்க்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல்
புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் Diier Vanderhasseltக்கும் அமைச்சர் நஸீர் அஹமட்க்கும் இடையில் பரஸ்பர கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுற்றாடல் அமைச்சில் இன்று(04) இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கிடையிலான சுற்றாடல் அனுபவங்கள், வரலாற்று ரீதியிலான நல்லுறவு என்பன தொடர்பாகவும் கருத்துப்பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் பொருளாதார சிக்கல் இத்தீர்வுக்கான IMF இன் ஒத்துழைப்புக்கும் பெல்ஜியத்தின் பங்களிப்பு தொடர்பாக அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவித்தார்.
(Visited 3 times, 1 visits today)