‘Project Freedom’; 15,000 படையினரை களமிறக்கும் அமெரிக்கா!
‘Project Freedom’ என்ற பெயரில் ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய நடவடிக்கையை அமெரிக்க இராணுவம் தொடங்கியுள்ளது.
இதற்காக சுமார் 15,000 படைவீரர்கள் மற்றும் 100 போர் விமானங்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பணியகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி வர்த்தகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீரிணையில் , சரக்கு போக்குவரத்தை தடையின்றி பராமரிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு அவசியமானது என்று அட்மிரல் பிராட் கூப்பர் குறிப்பிட்டுள்ளார்.
பிராந்திய பாதுகாப்பை நிலைநாட்டவும் மற்றும் கடல்வழித் தடைகளை எதிர்கொள்ளவும் இந்த தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதன் மூலம் சர்வதேச வர்த்தகப் பாதையில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பதே அமெரிக்காவின் முதன்மை நோக்கமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.





