இந்தியா செய்தி தமிழ்நாடு

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அலை! முடிவுக்கு வருகிறது மம்தா ஆட்சி!!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கின்றது.

அக்கட்சி 181 வெற்றி நடைபோட்டுவருகின்றது. திரிணமூல் காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 29 ஆம் திகதியும் நடைபெற்றன.

இரண்டாம் கட்டத் தேரத்லில் வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகளில் பால்டா தொகுதிக்கு வரும் 21ம் திகதி மறு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகித்தார்.

ஆனால் இம்முறை பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!