இலங்கை

யாழில் Online கேமிற்கு அடிமையான மாணவனின் விபரீத முடிவு

யாழ்ப்பாணத்தில் Online விளையாட்டிற்கு அடிமையான மாணவர் ஒருவர், நேற்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை – வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த மாணவன் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்துள்ளார்.

இவரது குடும்பத்தில் இவரைத் தவிர ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் விசேட தேவையுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு சூழலில், இந்த மாணவன் கைபேசி விளையாட்டுகளுக்குத் தீவிரமாக அடிமையாகியிருந்த நிலையில், நேற்று அதிகாலை விபரீத முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.

அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டபோது, வித்தியாசமான முறையில் ஆடை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மாணவனின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். ஒரு குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்த மாணவனின் இந்தத் துயர முடிவு, அப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!