புதிய திட்டத்தை முன்வைத்துள்ள ஈரான்: ட்ரம்ப் தகவல்!
ஈரான் புதியதொரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், அதன் முழுமையான விபரங்கள் இன்னும் தனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.
அமெரிக்க அரசு தற்போது ஈரானின் முக்கிய அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஈரான் ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





