இலங்கை செய்தி

திருகோணமலையில் நடைபாதை வியாபாரத்துக்கு தடை!

திருகோணமலை – மட்டிக்களி பிரதான வீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட திருகோணமலை மாநகரசபை தடை விதித்துள்ளது.

குறித்த இடத்துக்கு இன்று (24) விஜயம் மேற்கொண்ட முதல்வர் க.செல்வாஜா உள்ளிட்ட குழுவினர் அப்பகுதியில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுடன் கலந்துரையாடி மாற்றிடத்தை வழங்கினர்.

திருகோணமலை – கண்டி பிரதான வீதியின் மட்டிக்களி பகுதியில் முன்னெடுக்கப்படும் நடைபாதை வியாபாரத்தில் அப்பகுதியில் சன நெரிசல் ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்நிலையிலேயே அங்கு நடைபாதை வியாபாரத்தை மேற்கொள்ள மாநகரசபை தடை விதித்துள்ளது.

பிரதான வீதியில் நீண்டகாலமாக வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற 8 வியாபாரிகளுக்கு, மாநகரசபையால் அமைக்கப்பட்ட வண்டியில் விநாயகபுரம் வீதியில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!