ஈரான் ஆபத்தான நாடாக மாறக்கூடும்!
ஈரானுடன் மேற்கொள்ளப்படும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அணுசக்தி நிபுணர்களின் பங்களிப்பு அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார கொள்கை தலைவர் Kaja Kallas வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
துறைசார் நிபுணர்களின் பங்களிப்பு இல்லாமல் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் முந்தைய 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை விட பலவீனமாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணுசக்தி விவகாரங்களுடன் சேர்த்து ஈரானின் ஏவுகணைத் திட்டங்கள் மற்றும் நிழல் யுத்த நடவடிக்கைகள் போன்ற பிராந்தியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் Kaja Kallas பரிந்துரைத்துள்ளார்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால், ஈரான் எதிர்காலத்தில் மிகவும் ஆபத்தான நாடாக மாறும் அபாயம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.





