உலகம் செய்தி

04ஆவது அணுசக்தி கப்பலை உருவாக்குகிறதா சீனா – காணொளியால் உருவான சந்தேகம்!

சீனா தற்போது வெளியிட்டுள்ள காணொளி ஒன்று இணையத்தளத்தை ஆக்கிரமித்துள்ள நிலையில் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மக்கள் விடுதலை இராணுவ (PLA) கடற்படையின் 77வது ஆண்டு விழாவிற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட அந்தக் காணொளியில், விமானந் தாங்கி கப்பலில் பணியாற்றுவது போல் வடிவமைக்கப்பட்ட சில இராணுவ வீரர்கள்  இடம்பெற்றுள்ளனர்.

“ஹே ஜியான்” (He Jian) என்ற 19 வயது இளைஞர் அந்தக் குழுவில் இணைவது காட்டுப்பட்டுள்ளது.

இந்த காணொளி சீனா தனது நான்காவது அணுசக்தி விமானம் தாங்கி கப்பலைக் குறிப்பிடுகிறதா என்ற பொது ஊகத்தைத் தூண்டியுள்ளது.

அதேவேளை “ஹே ஜியான்” என்பது  மாண்டரின் மொழியில் “அணுசக்தி கப்பல்” என்ற சொல்லின் ஒத்த பொருளைக் குறிக்கிறது.

கடல்சார் வலிமையை அதிகரிக்கவும், வளங்களைப் பாதுகாக்கவும், பிராந்திய உரிமைகளை வலுப்படுத்தவும் முயலும் சீனா மற்றுமொரு அணுசக்தி கப்பலை உருவாக்கிவருவதை மறைமுகமாக  குறிப்பிடும் வகையில் இந்த காணொளியை வெளியிட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் விமர்சித்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!