செய்தி பொழுதுபோக்கு

வைரமுத்து மீது புதிய பாலியல் குற்றச்சாட்டை வைத்த பாடகி புவனா சேஷன்

தமிழ் திரையுலகின் பிரபல பாடகியான சின்மயி, சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது ‘மீ டு’பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வைரமுத்து அனுப்பிய மெயில் போன்றவற்றையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு அவர்மீது குற்றம் சாட்டினார்.

மேலும் கவிஞர் வைரமுத்துவால் ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். சின்மயி மட்டுமல்லாமல் பலர் வைரமுத்து மீது குற்றம்சாட்டினர். அதன் பிறகு சினிமா துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பான பல விஷயங்கள் வெளியே வந்தது.

இந்த நிலையில் தற்போது பிரபல பாடகி புவனா சேஷனும் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “17 பெண்கள் வைரமுத்திற்கு எதிராக பாலியல் குற்றசாட்டை முன் வைத்திருக்கின்றனர்.

ஆனால் 4 பேர் மட்டும்தான் தைரியமாக தங்களது பெயரையும் முகத்தையும் வெளி உலகத்திற்கு காட்டியுள்ளனர். பாலியல் வன்கொடுமை சூழ்நிலையில் இருந்து வெளியே வருவது என்பது மிகவும் கடினமான ஒன்று.

என்னுடைய கதையை நான் பகிர்வதற்கான நோக்கம் இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை. எனக்கு நேர்ந்ததை போல பிற பெண்களுக்கு நடக்க நான் விரும்பவில்லை.

பிரபல பாடகியான சின்மயி தொடர்ந்து வைரமுத்து மீதான குற்றசாட்டுகளை முன்வைக்கும் போது அவர் பலரால் விமர்சனம் செய்யப்பட்டார்.

சின்மயின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. இந்த சம்பவத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் இது குறித்தான விசாரணை என்பது நடக்கபோவதில்லை, நடத்தவும் விடமாட்டார்கள்” என்று பேசினார்.

(Visited 27 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!