ஹார்முஸ் நீரிணை முற்றுகை: 10 கப்பல்களை திருப்பி அனுப்பியது அமெரிக்கா!
ஈரான்மீதான கடற்படை முற்றுகை அமுலில் உள்ள நிலையில் இதுவரை 10 கப்பல்கள் திருப்பி அனுப்பட்டுள்ளன என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையில் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கடற்படை முற்றுகையை அமெரிக்கா அமுல்படுத்தியது.
இதற்கமைய ஈரானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களைத் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பட்டுவருகின்றன. முன்னோக்கி செல்வதற்கு இடமளிக்கப்படுவதில்லை.
ஈரானின் வருமானத்தைக் குறைப்பதற்கும், சர்வதேசக் கப்பல்களிடம் அந்நாடு வசூலிக்கும் கட்டணங்களைத் தடுப்பதற்குமே இதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இந்தத் தடையை மீறி இதுவரை எந்தக் கப்பலும் செல்லவில்லை என்றும், ஏற்கனவே 10 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தச் செயலை “கடற்கொள்ளை” என்று ஏற்கனவே விமர்சித்துள்ள ஈரான், இதற்குப் பதிலடியாக அண்டை கடல் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த கடுமையான நிலைப்பாடு ஈரானின் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.





