உலகம் செய்தி

ஈரானின் முக்கிய தலைவரின் குடும்ப உறுப்பினர்களை நாடு கடத்துகிறது அமெரிக்கா!

ஈரானின் பெண்கள் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைவர் மாசூமே எப்தேக்கரின் Masoumeh Ebtekar உறவினர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ Marco Rubio ரத்து செய்துள்ளார்.

இதற்கமைய எப்தேக்கரின் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் அமெரிக்காவில் வசிக்கும் தகுதியை இழந்து நாடுகடத்தப்படுவதற்காகக் காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஈரானியப் பிரமுகர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்குவதற்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஈரானியத் தளபதி காசிம் சுலைமானியின் உறவினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சில பெண்களின் விசாக்களையும் ரூபியோ ரத்து செய்திருந்தார்.

அமெரிக்காவின் தாக்குதலில் சில வருடங்களுக்கு முன்னர் சுலைமானி கொல்லப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!