ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கான ஆதரவு குறைந்தது

பிரித்தானியாவில் யூகோவ் (YouGov) நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கான ஆதரவு குறைந்து வருகின்றமை
தெரியவந்துள்ளது

முன்னர் இளநிலை வைத்தியர்கள் என அழைக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்கள், சம்பளம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களின் 15 ஆவது வேலைநிறுத்தத்தை இந்த வாரம் முன்னெடுத்தனர்.

2023 இல் பயிற்சி மருத்துவர்கள் முதன்முதலில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, ​​கருத்துக் கணிப்புகளின்படி, அவர்களுக்கு 59% மக்களின் ஆதரவு இருந்தது.

அந்த எண்ணிக்கை தற்போதுbb வெறும் 37 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய மருத்துவ சங்கத்தால் (BMA) பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பயிற்சி மருத்துவர்கள், தங்களின் சம்பளத்தை 2008 இல் இருந்த
நிலைக்கு மீட்டெடுக்க, இரட்டை இலக்க ஊதிய உயர்வை விரும்புகிறார்கள்.

நிதி நெருக்கடிக்குப் பிறகு, இங்கிலாந்து முழுவதும் ஊதிய வளர்ச்சி தேக்கமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!