மீண்டெழுவதில் ஈரான் தீவிரம்: தெஹ்ரானில் பணி ஆரம்பம்!
மீண்டெழுவதில் ஈரான் தீவிரம்: தெஹ்ரானில் பணி ஆரம்பம்!
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தூய்மைப்பணி மற்றும் சீரமைப்பு நடவடிக்கை என்பன முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையுடன் தொடர்புடைய Tasnim செய்தி நிறுவனம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
போர்க்கால சிதைவுகளை அகற்றி வீதிகளை மீண்டும் திறக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்பட்டுள்ளது.
நகரின் சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்காகத் தரையைச் சமன்படுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நகரின் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகக் கருதப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் இரு வாரகாலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. அமைதி நிலையை நீடிப்பதற்குரிய இராஜதந்திர பேச்சுகளும் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையிலேயே மீள் கட்டமைப்பு பணி ஈரானில் ஆரம்பமாகியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் ஈரானில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





