இந்தியா

புதுச்சேரியில் பிரதமர் மோடி பிரச்சாரம்

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் ஒரு கி.மீ. தொலைவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ நடத்தினார்.

இருபுறமும் கட்சியினர், மக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர்.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர்.காங்கிரஸ் 16, பாஜ 10, அதிமுக 2, லஜக 2 என 30 தொகுதிகளில் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டு, பிரச்சாரமும் உடனடியாக தொடங்கப்பட்டது.

தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நிலையில் கடந்த 30 ஆம் திகதி எனது வாக்குச் சாவடி, வலிமையான வாக்குச் சாவடி என்ற தலைப்பின் கீழ் கடந்த 30 ஆம் திகதி தொண்டர்களோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜக சார்பில் நடந்த ரோடு ஷோவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் சென்னையிலிருந்து ஹெலிகொப்டர் மூலம் புதுச்சேரிக்கு வந்தார்.

புதுச்சேரி விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் ரங்கசாமி, வேட்பாளர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை வீதி, முத்தியால்பேட்டை வழியாக ரோடு ஷோ தொடங்கும் அஜந்தா சந்திப்புக்கு பிரதமர் சென்றார்.

அங்கு 4.30 மணிக்கு ரோடு ஷோ தொடங்கியது. ரோடு ஷோ வாகனத்தில் பிரதமரின் ஒருபக்கத்தில் முதல்வர் ரங்கசாமி, மறுபக்கம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பின்னே பாஜ மாநில தலைவர் ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர். அண்ணா வீதி வழியாக என்டிஏ வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி கை அசைத்தபடி வாகனத்தில் வந்தார்.

Sainth

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!