இலங்கை செய்தி

இலங்கைக்கு அருகே ஈரான் கப்பல் ஏன் தாக்கப்பட்டது? ட்ரம்ப் வெளியிட்டுள்ள தகவல்!

“ இந்து சமுத்திரத்தில் வைத்து ஈரான் கப்பலை கைப்பற்றுவதற்குப் பதிலாக ஏன் தாக்கி அழிக்கப்பட்டது என இராணுவ அதிகாரிகளிடம் நான் கேள்வி எழுப்பினேன்.”

இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்தார்.

கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

“ ஏன் அவர்களைக் கொன்றோம் ? ஏன் அவர்களைப் பிடித்து எமது கடற்படை பயன்படுத்தவில்லை? என்று நான் படை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினேன்.

அதற்கு பதிலளித்த ஜெனரல்களில் ஒருவர், “ கப்பலை மூழ்கடிப்பது நல்லது, அது மிகவும் வேடிக்கையானது” என என்னிடம் கூறினார் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தெற்கு கடற்பரப்புக்கு அப்பால் உள்ள சர்வதேச கடற்பரப்பில் வைத்தே ஈரானின் போர்க்கப்பல்மீது அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல்மூலம் தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் 104 ஈரானிய மாலுமிகள் கொல்லப்பட்டிருந்தனர். 32 பேரை இலங்கை கடற்படையினர் காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!