இந்தியா செய்தி

இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கிய ஈரான்!

ஹோர்முஸ் Hormuz நீரிணை வழியாக இரு இந்திய சரக்கு கப்பல்கள் பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.

ஈரான்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், துபாயில் இருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து ஈரான் வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தினார்.

வளைகுடா நாடுகளில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள்களை இந்தியாவுக்கு கொண்டுவரும் சரக்கு கப்பல்களை அனுமதிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இதற்கமைய இந்திய கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரு சரக்கு கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதித்துள்ளது. இதையடுத்து அந்த இரு கப்பல்களும் பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணையைக் கடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!