பிரித்தானியாவில் காற்றின் தரம் பாதிப்பு – இரத்த மழை வீழ்ச்சியும் பதிவு
வட ஆப்பிரிக்காவிலிருந்து வந்த சஹாரன் தூசு பிரித்தானியாவில் பரவியதால் காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சில இடங்களில் இந்த தூசு மழையுடன் கலந்து இரத்த மழை போன்ற சிவப்பு நிற மழை பெய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வார இறுதியில் வெப்பநிலை பொதுவாக 11 முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தென்கிழக்கு இங்கிலாந்தில் சில இடங்களில் அது 18 டிகிரி வரை உயர கூடும் என கூறப்பட்டுள்ளது.
அடுத்த வாரத்தில் மழை மற்றும் பலத்த காற்று அதிகரிக்கும் என்றும், வடக்கு பகுதிகளில் மீண்டும் பனிப்பொழிவு
ஏற்படலாம் என்றும் முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.




