இலங்கை செய்தி

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி வயோதிபப் பெண் பலி: மேலும் இருவர் காயம்!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இரு பெண்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி கிராம பகுதிக்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை, மக்கள் குடியுருப்பு பகுதிக்கு சென்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.

யானை தாக்கியதில் 75 வயது பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கின்றன.

எனவே, தமது உயிர்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!