ஐரோப்பா

எப்ஸ்டீன் விவகாரம் : ஹிலாரி கிளிண்டனிடம் முன்னெடுக்கப்பட இருந்த விசாரணை இடைநிறுத்தம்!

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் (Hillary Clinton) ஜெஃப்ரி எப்ஸ்டீன் ( Jeffrey Epstein) தொடர்பான வழக்கு தொடர்பில் நேற்று மூடிய கதவுகளுக்கு பின்னால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் குறித்த வழக்கு விசாரணை இடைநிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூடிய கதவுகளுக்கு பின்னால் இடம்பெறும் விசாரணைகளை புகைப்படம் எடுக்கவோ, அதனை பகிர்ந்துகொள்ளவோ விசாரணைக் குழு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய விசாரணையின்போது மூடிய கதவுகளுக்கு பின்னால் கிளின்டன் இருக்கும் புகைப்படம் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டதுடன், “அவர்களின் குற்றச் செயல்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. திரு. எப்ஸ்டீனை நான் ஒருபோதும் சந்தித்ததாக எனக்கு நினைவில் இல்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே வழக்கு விசாரணை இடைநிறுத்தப்பட்டதாகவும், கிளிண்டனின் வழக்கறிஞர்கள் அதை மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு கிடைத்த பின்னர் மேலதிக தகவல்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!