பொம்மையிடம் தாயன்பை தேடிய குரங்கு : சரணாலயங்களை விமர்சிக்கும் PETA!
இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் தாயால் கைவிடப்பட்ட பஞ்ச் என்ற குரங்கு, ஒராங்குட்டான் பொம்மையிடம் தாய் அன்பை தேடி அந்த பொம்மையோடு வலம் வரும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் விலங்கு உரிமைகள் குழுவான PETA, இது “விலங்கியல் பூங்காக்களின் கொடுமைக்கு” சான்றாகும் என விமர்சித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் பிறந்த உடனேயே அவரது தாயால் நிராகரிக்கப்பட்ட பஞ்ச், மிருகக்காட்சிசாலை ஊழியர்களால் வளர்க்கப்பட்ட நிலையில் ஏனைய குரங்குகளுடன் இணைவதற்காக விடப்பட்டது.
இருப்பினும் ஏனைய குரங்குகள் அதனை புறக்கணத்த நிலையில், பஞ்ச் தனக்கு வழங்கப்பட்ட குரங்கு பொம்மையை கட்டிப்பிடித்து தூங்குவது, விளையாடுவது என தனியாக நாட்களை கழித்தது.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், விலங்கு நலக் உரிமைக் குழு பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
விலங்கியல் பூங்காக்கள் விலங்குகளை அடைத்து வைப்பதாகவும், அவற்றின் சுயாட்சி மற்றும் காடுகளில் அவை அனுபவிக்கும் சிக்கலான சூழல்கள் மற்றும் சமூக வாழ்க்கையை இழக்கச் செய்வதாகவும் PETA வாதிட்டது.
பஞ்சை ஒரு புகழ்பெற்ற சரணாலயத்திற்கு மாற்ற வேண்டும், அங்கு அவர் பொருத்தமான சமூக பிணைப்புகளுடன் மிகவும் இயற்கையான சூழலில் வாழ முடியும் என்று அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.





