ஐரோப்பா

27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் – பிரித்தானிய நீதிமன்றத்தின் உத்தரவு!

பிரித்தானியாவில் பெண் ஒருவரை 27 முறை கத்தியால் குத்தி படுகொலை செய்த இலங்கை நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

37 வயதான திசாரா வெரகல என்பரே மேற்படி தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திககியன்று, கார்டிஃப் நகரில் உள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில், நிரோதா நிவுன்ஹெல்லா என்ற பெண்ணை  (குற்றவாளியின் முன்னாள் மனைவி)  திசாரா வெரகல கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு இலங்கையில் திருமணம் முடித்து பின்னர் பிரித்தானியாவிற்கு குடிப்பெயர்ந்துள்ளனர். அங்கு வசித்த காலப்பகுதியில்  திருமண உறவில்  விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் நிரோதா அவரிடம் இருந்து  விலகி இருந்த நிலையில், வேறு ஒரு ஆணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தேகநபர் 15 சென்டிமீட்டர் நீளமுள்ள கூர்மையான கத்தியால் அந்தப் பெண்ணைக் குத்தி படுகொலை செய்துள்ளார்.

குற்றவாளி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!