சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பம்: போட்டிகள் தொடர்பான முழு விபரம்…!
T20 World Cup உலகக்கிண்ண தொடரில் மிக முக்கிய சுற்றான சூப்பர் 8 super 8 சுற்று நாளை (21) ஆரம்பமாகின்றது.
இதற்கமைய சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.
22 ஆம் திகதி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
கண்டி பல்லேகல மைதானத்தில் முற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். அன்றைய தினமே இரவு 7 மணிக்கு இந்தியாவில் நடைபெறும் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மோதுகின்றன.
23 ஆம் திகதி ஒரு போட்டி மட்டுமே நடைபெறுகின்றது. சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இந்தியாவில் மோதவுள்ளன.
24 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் கண்டி பல்லேகல மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
25 ஆம் திகதி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
26 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணி தென்னாபிரிக்கா அணியை எதிர்கொள்கின்றது.
அதே நாளில் (26) இந்தியா மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான போட்டியும் இடம்பெறுகின்றது.
27 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் களம் காண்கின்றன.
28 ஆம் திகதி இலங்கை , பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது.
மார்ச் முதலாம் திகதி சிம்பாப்வே, தென்னாபிரிக்கா ஆகிய அணிகள் களம் காண்கின்றன.
அதேநாளில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறும்.
மார்ச் 4 ஆம் திகதி அரை இறுதிச்சுற்று ஆரம்பமாகும்.
மார்ச் 8 ஆம் திகதி இறுதிப்போட்டி இடம்பெறும்.





