மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித ஹேரத் தலைமையில் விசேட குழு நியமனம்!
மாகாணசபைத் தேர்தலை எந்தமுறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய Special Parliamentary Select Committee உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது.
இதன்போதே மேற்படி குழுவுக்குரிய உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபாநாயகர் அறிவித்தார்.
மேற்படி விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதி அமைச்சர்களான முனீர் முலபர், சுனில் வட்டகல, அருண் ஹேமசந்திரா ஆகியோரும், நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், லக்ஷ்மன் நிபுனராச்சி ஆகியோர் குழுவில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் இரா. சாணக்கியன், சமன்மலி குணசிங்க, தர்மபிரிய விஜேசிங்க, சந்தன சூரியாராச்சி மற்றும் நிஷாம் காரியப்பர் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.





