பிரித்தானியாவில் 50 நாட்களாக கொட்டித் தீர்க்கும் மழை : வெள்ள அபாய எச்சரிக்கை!
பிரித்தானியாவின் கார்ன்வாலில் ( Cornwall) உள்ள கார்டின்ஹாம் (Cardinham) என்ற கிராமத்தில், 50 நாட்களாக தொடர்ந்து மழைப் பெய்துள்ளது. டிசம்பர் 30 முதல் 441.4 மிமீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
வழக்கமான மழைப்பொழிவை விட இம்முறை அதிகளவிலான மழைப் பொழிவு பதிவானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்காண்டிநேவியா பகுதியில் அதிகமான வெள்ளம் பதிவாகியுள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் கிழக்குப் பகுதிகளும் இந்த மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக அதிக மழைப்பொழிவைப் பெற்றுள்ளன.
சுற்றுச்சூழல் நிறுவனம் இங்கிலாந்துக்கு 67 வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் பல பகுதிகளுக்கு குளிர் சுகாதார எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





