கிரீன்லாந்தில் ஆட்சி நடத்துவது பற்றி உயர் மட்ட தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்!
கிரீன்லாந்தில் ஆட்சி நடத்துவது குறித்து டென்மார்கின் பிரதமரும், கீரீன்லாந்தின் பிரதமரும், அமெரிக்க அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற மியூனிக் பாதுகாப்பு மாநாட்டின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை சந்தித்து இரு அதிகாரிகளும் 15 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின்போது கிரீன்லாந்தின் நலன்கள் மீண்டும் ஒருமுறை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேற்படி சந்திப்பு தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள டென்மார்க் பிரதமர் ஃபிரடெரிக்சன் (Frederiksen), ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகவும், “உயர் மட்ட பணிக்குழுவில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி பணிகள் தொடரும்,” என்றும் கூறியுள்ளார்.
ஐரோப்பாவிற்கும் வொஷிங்டன் மற்றும் நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் மேற்படி சந்திப்பானது இடம்பெற்றுள்ளது.





