அரசியல் இலங்கை செய்தி

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் பிளவா?

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் Democratic Tamil National Alliance முக்கிய கூட்டத்தை அதன் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. Selvam Aidakalanathan புறக்கணித்துள்ளார்.

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய அரசியல் கலந்துரையாடல் நேற்றுக் காலை முதல் பிற்கல் வரை வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

இதில் அந்தக் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ்., புளொட், ஜனநாயகப் போராளிகள் கட்சி, சமத்துவக் கட்சி ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ கட்சியின் தலைவரும் அக் கூட்டணியின் ஒரேயொ ரு நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அதேவேளை, அவரது கட்சி சார்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் ரெலோவின் சார்பில் பெண் ஒருவர் மாத்திரமே பங்கேற்றிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மாகாண சபைத் தேர்தல், புதிய அரசமைப்பு, கட்சியின் மாநாடு, பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!