அரசியல் இந்தியா

பா.ஜ.கவின் புதிய தேசிய தலைவர் யார்? 20 ஆம் திகதி வெளியாகிறது அறிவிப்பு!

பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க.) BJP புதிய தேசிய தலைவர் யார் என்பது தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா செயல்பட்டுவருகின்றார். இரு தடவைகள் அவர் இப்பதவியை வகித்துவிட்டார்.

அவருடைய தலைமைப் பதவி காலம் கடந்த வருடம் ஜூன் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

இதனால் பா.ஜ.க. புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனினும், இது விடயத்தில் பா.ஜ.க. மௌன போக்கை கடைபிடித்துவந்தது.

பல மாதங்கள் கடந்தும் பா.ஜ.கவுக்கு தேசிய தலைவர் ஒருவர் தேர்வு செய்யப்படாமல் இருப்பதால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி இவ்விவகாரத்தை அரசியல் ஆயதமாக்கியுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி புதிய தேசிய தலைவர் யார்? என்பது தெரியவரும் என பா.ஜ.க. நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இந்த தேர்தலை நடத்துவதற்காக கே. லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளார்.

ஆதில் ஜனவரி 19- ஆம் திகதி மதியம் 2 மணி முதல் 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனுவை மாலை 5 மணி முதல் 6 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

வேட்புமனு மீதான பரிசீலனை 4 மணி முதல் 5 மணி வரை நடைபெறும். தேவைப்பட்டால் ஜனவரி 20- ஆம் திகதி தேர்தல் நடைபெறும்.

அன்றைய தினம் புதிய தலைவர் யார் என்பது அறிவிக்கப்படும ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதின் நபின் பா.ஜ.வின் தேசிய செயல் தலைவராக தற்போது செயல்பட்டுவருகின்றார். எனவே, அடுத்த தலைவராக அவர் தெரிவாகக்கூடும் என தெரியவருகின்றது.

இவருக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஆதரவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தை பாரதிய ஜனதாக் கட்சியே ஆள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
error: Content is protected !!