ஐரோப்பா முக்கிய செய்திகள்

அமெரிக்க துருப்புகள் உக்ரைனில் களமிறக்கப்படுமா? – புதிய வியூகம் வகுத்த ஜெலென்ஸ்கி! !

ஜனாதிபதி ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்று வரும் அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க துருப்புக்களை உக்ரைனில் தங்கவைக்கும் முயற்சியில் ஜனாதிபதி  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பில் ட்ரம்ப் முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தத்தில் உக்ரைன் 90 சதவீதம் அண்மையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அமெரிக்க துருப்புகளை நிறுத்துவதற்கும் அந்நாட்டின் ஜனாதிபதி  வோலோடிமிர் ஜெலென்ஸ்கி  ஆலோசனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே  துவாப்ஸில் (Tuapse) உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தையும் ரஷ்யாவின் தாமன் (Taman) தீபகற்பத்தில் உள்ள ஒரு எண்ணெய் முனையத்தையும் தாக்கியதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.

மேலும் உக்ரைன் உடனான  போரை வென்று காட்டுவோம் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் புத்தாண்டு தினத்தில் சபதம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!