ஜெர்மனியில் சமூக உதவி பணம் 100 யூரோ அதிகரிப்பு?
ஜெர்மனியில் சமூக உதவி பணம் 100 யூரோ அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை சமூக அமைப்புக்கள் முன்வைத்துள்ளன.
ஜெர்மனியில் சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்களுக்கு போதுமான அளவு பணம் இல்லை என தெரிவித்து குறித்த கொடுப்பனவை மாதாந்தம் 100 யூரோவாக அதிகரிக்க வேண்டும் என பல சமூக அமைப்புக்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
ஜெர்மனியில் பண வீக்கமானது 7.2 சதவீதமாக காணப்படுகின்றது. இதேவேளையில் உணவு பொருட்களுடைய விலை ஏற்றமானது கடந்த ஒரு வருடத்தில் 17. 2 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் எரிபொருட்களுடைய விலையேற்றமானது 21.1 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்கள் தங்களது நாளாந்த வாழ்க்கையை வாழ மிகவும் கஷ்ட்டப்படுகின்றார்கள் என்றும் இதன் காரணத்தினால் இவ்வகையான அதிகரிப்பு வேண்டும் என்றும் குறித்த அமைப்புக்கள் வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.
இந்நிலையில் மின்சாரத்துக்காக தங்களது சமூக உதவி பணத்தில் இருந்து அவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் இந்த சமூக அமைப்புக்கள் தெரிவித்து இருக்கின்றது.
இந்நிலையில் அடுத்த மாதம் முதலாம் திகதியில் இருந்து சில புதிய சட்டங்கள் கூட சமூக உதவி பணத்தில் வாழுகின்றவர்களுக்காக வருகின்றதாகவும் தெரியவந்திருக்கின்றது.
குறிப்பாக எவர் ஒருவர் மாதம் 520 யூரோவுக்கும் 1000 யூரோவுக்கும் வருமானத்தை பெற்று மேலதிகமாக சமூக உதவி பணத்தில் வாழ்ந்தால் இவர்கள் தங்களது வருமானத்தில் 30 சதவீதமான வருமானத்தை கையில் வைத்து இருக்கலாம் என்றும் தெரியவந்திருக்கின்றது.
மேலும் பிறந்த குழந்தைகள் பிரசவித்த தாய் மார்களுக்கு வழங்குகின்ற பணமானது வருமானமாக கணிக்கப்படமாட்டாது என்றும் தெரியவந்திருக்கின்றது.
1.7.2023 இல் இருந்து மேலதிக கல்வியை கற்கின்றவர்களுக்கு சமூக உதவி திணைக்களமானது மாதம் 150 யூரோ வழங்கப்படவுள்ளதுடன் மேலதிக பணமான 75 யூரோ வழங்கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.