டெல்லியில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 25 வயது நபர் கைது
வடக்கு டெல்லியின்(Delhi) பவானாவில்(Bawana) நான்கு வயது சிறுமியை மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 25 வயது இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பவானாவில் வசிக்கும் ரிஸ்வான்(Rizwan) என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி மது போதையில் குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் குறித்து வந்த புகாரை தொடர்ந்து மீட்பு குழு சம்பவ இடத்திற்குச் சென்று சிறுமி அழுது கொண்டிருந்ததையும், அவளது அந்தரங்கப் பகுதிகளில் இருந்து இரத்தம் வெளியேறியதையும் கண்டனர்.
அவர் உடனடியாக மருத்துவ பரிசோதனைக்காக SRHC மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக BSA மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை ஒரு காலியான அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





